தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ், தெலுங்கில் வெளியான 'இஞ்சி இடுப்பழகி' (தெலுங்கில் சைஸ் சீரோ) படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியவர் கனிகா திலோன். இது தவிர 'ஓம் சாந்தி ஓம்', 'ரா ஒன்', படங்களுக்கும் திரைக்கதை வசனம் எழுதியவர். தற்போது 'மன்மாரிசன்' என்ற படத்திற்கும் எழுதி உள்ளார். அடிப்படையில் எழுத்தாளரான கனிகா 'பாம்பே டக் இட்ஸ் எ பிஸ்' என்ற நாவலை எழுதியுள்ளார். தற்போது 'தி டான்ஸ் ஆப் துர்கா' என்ற நாவலை எழுதியுள்ளார்.
பெரிய நடன கலைஞராக வேண்டும் என்ற லட்சியம் கொண்ட ஒரு ஏழை சிறுமியை ஒரு வயதானவருக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். அதலிருந்து தப்பி அவள் எப்படி தன் லட்சியத்தை அடைகிறாள் என்கிற கதை. பெண்ணியம் பற்றி விரிவாக பேசும் நாவல். இதன் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. நடிகை அனுஷ்கா வெளியிட்டார். விழாவில் இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன். 'அம்மா கணக்கு' படத்தின் இயக்குனர் அஸ்வினி அய்யர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.