பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'கபாலி' படத்தின் டீசர் மே 1ம் தேதி வெளியாகி 2 கோடி பார்வையாளர்களைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. இப்படத்தின் தெலுங்கு டீசரும், 39 லட்சம் பார்வைகளைக் கடந்தும், 50 ஆயிரம் லைக்குகளைப் பெற்றும் நேரடித் தெலுங்குப் படம் அளவிற்கு சாதனை புரிந்துள்ளது. இதுவரையில் தெலுங்கில் வந்த டீசர்களில் பவன் கல்யாண் நடித்து வெளிவந்த 'சர்தர் கப்பார் சிங்' படத்தின் டீசரும், ஜுனியர் என்டிஆர் நடித்து வெளிவந்த 'நன்னகு பிரேமதோ' படத்தின் டீசரும் மட்டுமே 50 ஆயிரம் லைக்குகளைக் கடந்துள்ளது.
'கபாலி' டீசர் சாதனை புரிந்துள்ளதைப் போலவே படத்தின் பாடல்களும் யு டியூபில் சாதனை படைத்து வருகிறது. கடந்த வாரம் வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மொத்தமாக 1 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. அதிலும் குறிப்பாக ரசிகர்களை அதிகம் கவர்ந்த பாடலான 'நெருப்புடா...' பாடல் மட்டும் 50 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. அடுத்ததாக 'உலகம் ஒருவனுக்கா...' பாடல் 19 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைக் கடந்தும், 'வானம் பார்த்தேன்...' பாடல் 11 லட்சத்திற்கும், 'வீர துரந்தரா...' பாடல் 10 லட்சத்திற்கும், 'மாய நதி...' பாடல் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைக் கடந்தும் சாதனை படைத்துள்ளன.
இரு வேறு விதமான விமர்சனங்களைப் பெற்றுள்ள 'கபாலி' படத்தின் பாடல்கள் ஒரு வாரத்திற்குள்ளாகவே இப்படி ஒரு பார்வைகளைப் பெற்றிருப்பது திரையிசை உலகல் ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது.