ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ரெட்டைச்சுழி படத்தில் கே.பாலசந்தருடன் இணைந்து நடித்தார் பாரதிராஜா. அதன்பிறகு பாண்டியநாடு, நினைத்தது யாரோ போன்ற படங்களில் நடித்தவர், ஓம், சிகப்பு ரோஜாக்கள்-2 போன்ற படங்களிலும் நடிக்கிறார். இந்த நிலையில், பின்னணி பாடகர் விஜய் யோசுதாஸ் நாயகனாக நடிக்கும் படைவீரன் என்ற படத்திலும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் பாரதிராஜா. இது சிறிய வேடம் என்றாலும் கதைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வேடமாம்.
முக்கியமாக, மதுரை மண்வாசைனக்கதை என்பதால் அப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மதுரையில் நடந்து கொண்டிருக்கிறது. பாரதிராஜா அந்த பாத்திரமாகவே மாறி நடித்துள்ளாராம். அதேபோல் அவரது மகன் மனோஜூம் ஒரு வேடத்தில் நடிக்கிறாராம். ஆரம்பத்தில் பாரதிராஜாவைதான் இந்த படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று பேசி வந்தவர்கள், பின்னர் ஒரு கேரக்டருக்கு பரிட்சயமான நடிகர் வேண்டும் என்று திட்டமிட்டபோது மனோஜை புக் பண்ணினார்களாம். ஆக, இந்த படைவீரன் படத்தில் பாரதிராஜா-மனோஜ் இருவரும் நடிக்கிறார்கள்.