நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… |
பிரேமம் பட நாயகிகளில் ஒருவர் மடோனா செபஸ்டியன். அந்த படத்தில் அவரது பர்பாமென்ஸ் பேசும்படியாக இருந்ததால் விஜயசேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் படத்தில் நடித்தார். அதன்பிறகு பிரேமம் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் மடோனா, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜயசேதுபதி நடிக்கும் புதிய படத்திலும் மீண்டும் அவருடன் ஜோடி சேர்ந்துள்ளார். இந்த நிலையில், ஹீரோக்களுடன் கட்டிப்பிடித்து நடிக்க மாட்டேன் என்றொரு கண்டிசனை அழுத்தமாக கூறி வருகிறார் மடோனா.
அதாவது, பிரேமம் படத்தில் நடித்தபோதே காதல் காட்சிகளில் நடிப்பேன். ஆனால் ஹீரோவாக கட்டிப்பிடிக்க மாட்டேன். நடனமாடுவேன், ஆனால் கவர்ச்சி உடையணிய மாட்டேன் என்றெல்லாம் தனது சார்பில் சில கண்டி சன்களை போட்டுத்தான் நடித்தாராம் மடோனா. ஆனால் இப்படி சொன்ன அவர், காதலும் கடந்து போகும் படத்தில் ஒரு காட்சியில் விஜயசேதுபதியுடன் சரக்கு அடித்து விட்டு அவருடன் படுத்து உருள்வது போன்று நடித்திருந்தார். இப்படியெல்லாம் மற்ற நடிகைகளே செய்யத்துணியாத காட்சியில் நடித்த மடோனா, ஹீரோவை கட்டிப்பிடிப்பதற்கு மட்டும் தடை போடுவதால், சில இயக்குனர்களும், ஹீரோக்களும் அவர் மீது அதிருப்தியில் உள்ளனர்.