மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் |
நடிகர் சல்மான் கான் நடித்த சுல்தான் படம் ஜரும் ஜூலை 6ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் சுல்தான் படத்தில் பாடகர் அரிஜித் சிங் பாடிய ஜக் குமியா என்ற பாடலை சல்மான் கான் படத்தில் இருந்து நீக்கியதாக கடந்த சில நாட்களுக்கு செய்தி பரவியது. இது பெரும் சர்ச்சையாக்கப்பட்டது. இந்த சர்ச்சைக்கு முடிவு கட்டும் விதமான சமீபத்தில் பேட்டி ஒன்றில் சல்மான் கான் பதிலளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள விளக்கத்தில், இது தயாரிப்பாளர்கள் எடுத்த முடிவு. வொவொரு படத்திலும் எத்தனையோ பாடகர்கள் மாற்றப்பட்டுள்ளனர். எத்தனையோ பேர் அவர்களுக்கு பதில் வந்து பாடி உள்ளனர். ஆனால் அந்த படத்தில் யாருடைய குரல் பொருத்தமாக இருக்கும் என்பதை இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தான் முடிவு செய்ய வேண்டும். ஒருவேளை குரல் பொருத்தமானதாக இல்லாமல் இருந்தால், அது என் குரலாக இருந்தாலும் நிராகரிக்கப்படும். அதுனால் அவர்கள் வாழ்க்கையில் விரக்தி அடைந்து விடக் கூடாது என தெரிவித்துள்ளார்.