இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
உட்தா பஞ்சாப் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பஞ்சாபி நடிகரான தில்ஜித் தோசன்ஜிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்த படத்தில் நடித்தது குறித்து தில்ஜித் கூறுகையில், பாலிவுட்டில் எனது வருகையால் பஞ்சாபி நடிகர்கள் எளிமையாக பாலிவுட்டிற்குள் வரும் வழி எளிமையாகி விட்டதாக நம்புகிறேன். பாலிவுட்டில் அவர்கள் தங்களின் திறமையை வெளிக்காட்டவும் நல்ல வாய்ப்பாக அமையும். அதே சமயம், நல்ல திறமையுடன் கடினமாக உழைத்தால் வெற்றிபெற முடியும் என நினைக்கிறேன். கடின உழைப்பு இருந்தால் எந்த ஒரு நடிகர் அல்லது நடிகைக்கும் வாய்ப்பு கிடைக்கும். அவர்கள் பஞ்சாப் அல்லது வேறு எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி என தெரிவித்துள்ளார்.