பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சென்னையிலிருந்து தெலுங்குத் திரையுலகிற்குச் செல்லும் நடிகைகளுக்கு அங்கு தனி ராசி இருக்கிறதோ என்னவோ தெரியவில்லை. அறிமுகப் படத்திலேயோ அல்லது சில படங்கள் கழித்தோ தங்களது வெற்றி முத்திரையைப் பதித்து விடுகிறார்கள். அந்த விதத்தில் 'ஜென்டில்மேன்' படத்தின் மூலம் தற்போது புதிதாக முத்திரை பதித்துள்ளவர் நிவேதா தாமஸ்.
கமல்ஹாசன், கௌதமியின் மகளாக 'பாபநாசம்' படத்திலும், 'ஜில்லா' படத்தில் விஜய்யின் தங்கையாகவும், ஜெய்யுடன் 'நவீன சரஸ்வதி சபதம்', சசிகுமார், நரேஷுடன் 'போராளி' ஆகிய படங்களிலும் நடித்தார் நிவேதா தாமஸ். சில முக்கிய மலையாளப் படங்களிலும் நடித்துள்ள நிவேதா, நானி கதாநாயகனாக நடித்துள்ள 'ஜென்டில்மேன்' படம் மூலம் தெலுங்குத் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். சுரபி ஒரு நாயகியாகவும், நிவேதா மற்றொரு நாயகியாகவும் நடித்துள்ள இந்தப் படத்தில் நிவேதாவின் நடிப்பைப் பார்த்து தெலுங்குத் திரையுலகினர் ஆச்சரியப்பட்டுள்ளதாக டோலிவுட்டிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நித்யா மேனனுக்குப் பிறகு அழகுடனும், திறமையுடனும் ஒரு புது நடிகை கிடைத்துள்ளார் என தெலுங்கு விமர்சகர்கள் பாராட்டி வருகிறார்களாம். “இப்படத்திற்காக எனக்கு வரும் பாராட்டுக்கள் என்னை மகிழ வைத்துள்ளது. இந்தப் படத்தின் கதையைக் கேட்டதுமே நிச்சயம் இந்தப் படம் பெரிய வெற்றி பெறும் என்று நம்பினேன். இப்படத்தின் பணியாற்றியுள்ள அனைவருமே பாராட்டுக்களுக்குச் சொந்தக்காரர்கள்,” என நிவேதா கூறியுள்ளார்.
ஒரு வித்தியாசமான கதை கொண்ட 'ஜென்டில்மேன்' படம் தமிழ் ரீமேக்கிற்குப் பொருத்தமான ஒரு படம் என்கிறார்கள்.