இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதால் சில பிரபல சேனல்கள் தங்களது நிகழ்ச்சி ஒளிபரப்புகளின் தரத்தை டெக்னிக்கல் ரீதியாகவும் உயர்த்தி வருகின்றன. அந்த வகையில், தமிழ் தொலைக்காட்சிகளில் சன் டிவி எச்டி தரத்தில் முதலில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்தது. அதையடுத்து விஜய் டிவியும் எச்டிவிக்கு மாறியது. இந்த தொழில்நுட்பம் காரணமாக நிகழ்ச்சிகளை திரையில் தெள்ளத்தெளிவாக பார்க்க முடியும்.
இந்தநிலையில், நேற்று முதல் ஜெயா டிவியும் தங்களது சேனல் ஒளிபரப்பை எச்டியில் ஒளிபரப்பை தொடங்கியிருக்கிறது. தொடர்ச்சியாக ஜெயா குழுமத்தின் ஜெயா ப்ளஸ், ஜெயா மேக்ஸ், ஜெயா மூவி ஆகிய சேனல்களிலும் இந்த எச்டி ஒளிபரப்பு தொடங்கப்படவிருக்கிறது. இதையடுத்து, தமிழ் சேனல்களில் முன்ன ணியில் இருக்கும் இன்னும் சில சேனல்களும் எச்டி ஒளிபரப்புக்கு மாற தயாராகிக்கொண்டிருக்கின்றன.