தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அட்டகத்தி, மதயானைக்கூட்டம், மெட்ராஸ் படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்த கலையரசன், சில படங்களில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்தார். ஆனால் தற்போது ராஜமந்திரி படத்தில் மெயின் ஹீரோவாக நடித்துள்ளார்.
இதுபற்றி கலையரசன் கூறுகையில்,நான் மெட்ராஸ் படத்திற்கு அப்புறமா ஹீரோவாக கமிட்டான முதல் படம் ராஜா மந்திரி படம்தான். இந்த படத்திற்காக டைரக்டர் உஷா என்னிடம் கதை சொல்ல வந்தபோது காமெடி ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று சொன்னார். ஆனால் காமெடி எனக்கு கஷ்டம் என்பதால் இது செட்டாகுமா என்று யோசித்தேன். நானும் மெட்ராஸ் படத்தில் ரப்பாக நடித்திருந்ததால் டைரக்டர் உஷாவும் போனவர் சில மாதங்களாக என்னை தொடர்பு கொள்ளவே இல்லை. அதனால் வேறு ஹீரோக்களை தேடிப்போய் விட்டார் என்றுதான் நான் நினைத்துக்கொண்டிருந்தேன்.
ஆனால் நான் எதிர்பாராத வகையில் பின்னர் அவர் வந்தார். அப்போது உங்களால் காமெடி பண்ண முடியும் என்று நம்பிக்கை கொடுத்தார். அதனால் நானும் நடித்தேன். கதை எனக்கு பிடித்திருந்ததால் முழுஈடுபாடு காட்டினேன். அதோடு இந்த டீம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. இந்த படத்தில் எனது வேடத்தை விட எனக்கு அண்ணனாக நடித்திருக்கும் காளிவெங்கட்டின் கேரக்டர் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அந்த வகையில், நான், காளிவெங்கட், பாலசரவணன் கூட்டணியில் இந்த ராஜாமந்திரி படம் நல்ல கலகலப்பாக வந்திருக்கிறது. நானும் காமெடி நடிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதாக கருதுகிறேன் என்கிறார் கலையரசன்.