பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
பர்கான் அக்தர் இயக்கத்தில் ஷாரூக்கான் நடிப்பில் வெளிவந்த படம் டான் மற்றும் டான்-2. இந்த இரண்டு பாகத்திலும் ப்ரியங்கா சோப்ரா முதன்மை ரோலில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது டான்-3 படத்திற்கான வேலைகள் நடந்து வருகிறது. இதில் முதல் இரண்டு பாகத்தில் நடித்த ப்ரியங்கா சோப்ரா நடிக்கவில்லை என்று உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக கத்ரீனா கைப் அல்லது ஜாக்குலின் பெர்ணான்டஸ் நடிக்கலாம் என தெரிகிறது.
தற்போது ப்ரியங்கா சோப்ரா, ஹாலிவுட் டெலி சீரியலான குவான்டிகோ மற்றும் ஹாலிவுட் படமான பேவாட்ச் படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து ஹாலிவுட்டிலேயே ப்ரியங்கா கவனம் செலுத்த முடிவு செய்திருப்பதால் பாலிவுட் படங்கள் எதிலும் அவர் கமிட்டாகவில்லை என்கிறார்கள்.