ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபாஸ் நடிப்பில் மிர்ச்சி மகேஷ் பாபு நடிப்பில் ஸ்ரீமந்துடு போன்ற சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் கொரட்டாலா சிவா, தற்போது நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் ஜனதா கேரேஜ் படத்தை இயக்கி வருகின்றார். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிக்கும் ஜனதா கேரேஜ் படத்தில் சமந்தா, நித்யா மேனன் என இரு நாயகிகள் நடிகின்றனர். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை நியூ செர்ஷியில் நடத்த படக்குழு திட்டமிட்டிருந்தது. இம்முடிவினை மாற்றி தற்போது ஐதராபாத்தில் ஜனதா கேரேஜ் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாம். ஜூலை 25ல் நடைபெறவுள்ள இவ்விழாவில் டோலிவுட்டின் பிரபலங்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். மைத்திரி மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ஜனதா கேரேஜ் திரைப்படம் ஆகஸ்ட் 12ல் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.