ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
விஜய் நடித்த 'மதுர' படத்தை இயக்கியவர் மாதேஷ். ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'மோகினி' என்ற படத்தை இயக்குகிறார். இது ஹாரர் திகில் படம். திரிஷா ஹீரோயின் மட்டுமல்ல கதையே அவரைச்சுற்றித்தான் நடக்கும்.
இதன் படப்பிடிப்பு தற்போது லண்டனில் தொடங்கி நடந்து வருகிறது. த்ரிஷாவுடன் யோகிபாபு, லொள்ளுசபா சாமிநாதன் நடித்து வருகிறார்கள். இங்கிலாந்து ராணி முன்பு வாழ்ந்த ஒரு பழமையான அரண்மனையில் படப்பிடிப்பு நடக்கிறது. த்ரிஷாவுக்கு லண்டன் அத்துபடி என்பதால் புதிதாக சென்றுள்ள யோகிபாபு உள்ளிட்டவர்களை தேம்ஸ் நதியில் படகு பயணம் அழைத்து சென்று மகிழ்வித்துள்ளார். அதோடு லண்டன் முழுவதையும் சுற்றிக் காட்டியுள்ளார். அந்த படங்களை தனது டுவிட்டரிலும் பதிவிட்டுள்ளார்.