டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவிற்கு சமீபத்தில் நடிகர் கரண் சிங் குரோவர் உடன் திருமணம் நடந்தது. திருமணத்தை தொடர்ந்து நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் பிபாஷா-கரணை வாழ்த்தினார்கள். நடிகரும், பிபாஷாவின் நண்பருமான சல்மானும் வாழ்த்தினார்.
இந்நிலையில் பிபாஷாவிற்கு பிறந்தநாள் பரிசாக, சல்மான் ரூ.10 கோடி மதிப்பிலான வீடு ஒன்றை பரிசாக அளித்ததாக சில தினங்களாக பாலிவுட்டில் காட்டுத்தீ போல் செய்தி பரவியுள்ளது. இந்த செய்தி பிபாஷாவின் காதுக்கு எட்டியதும் கொதித்து போய்விட்டார்.
இதுகுறித்து பிபாஷா தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது... ‛‛இப்படியொரு அபத்தமான குற்றச்சாட்டை இதுவரை நான் கேட்டதில்லை, படித்ததில்லை. எதற்காக நான் அடுத்தவர்களிடம் இதுபோன்ற பரிசை வாங்க வேண்டும் என்று கோபமாக கூறியுள்ளார்.