பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாள சீரியல்களில் நடித்து வந்தவர் ஆஷாசரத். பின்னர் சினிமா நடிகையான அவர், மோகன்லால்-மீனா நடித்த திருஷ்யம் படத்தில் ஐஜி கீதா பிரபாகர் என்ற வேடத்தில் நடித்து பேசப்பட்டார். அதனால் அந்த படத்தின் தமிழ், கன்னட ரீமேக்கிலும் அதே ஐஜி வேடத்தில் மீண்டும் நடித்தார் ஆஷாசரத். அந்த வகையில், பாபநாசம் படத்தில் ஆஷாசரத்தின் நடிப்பு கவர்ந்ததால் தூங்காவனம் படத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார் கமல். இருப்பினும், பின்னர் தமிழில் ஆஷாசரத்துக்கு புதிய படவாய்ப்புகள் இல்லை. அதனால் மலையாள படங்களில் மட்டுமே நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், தற்போது தெலுங்கில் பாகுபலி-2வில் நடித்து வரும் அனுஷ்கா, அதையடுத்து பாகமதி என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படமும் அவர் இதற்கு முன்பு நடித்த ருத்ரமாதேவி படம் போன்று சரித்திர பின்னணியில் உருவாகிறது. அதனால் கத்திச்சண்டை, வாள்சண்டை என்றெல்லாம் கடின உழைப்பை அந்த படத்துக்காக கொடுக்கிறார் அனுஷ்கா. மேலும், இந்த படத்தில் இந்தி நடிகை தபுவை ஒரு வேடத்தில் நடிக்க கேட்டபோது அவரிடம் கால்சீட் இல்லை யாம். அதனால் இப்போது அந்த வேடத்துக்கு ஆஷாசரத்தை புக் பண்ணியிருக்கிறார்கள். பாகமதி படத்தில் இந்த வேடம் கதாநாயகி அனுஷ்காவுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் உள்ள வேடமாம்.