ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டைப்போலவே கேரளாவிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர். அதன்காரணமாக அவர் நடித்த படங்கள் திரைக்கு வரும்போது தமிழ் நாட்டிலுள்ள தியேட்டர்களில் கட்அவுட் வைத்து பரபரப்பை ஏற்படுத்துவது போன்று கேரளாவிலுள்ள விஜய் ரசிகர்களும் கட்அவுட், பேனர் வைத்து கொண்டாடி மகிழ்கிறார்கள். மேலும், ஏதாவது விசேஷ நிகழ்ச்சிகள் என்றால் மலையாள நடிகர்கள் நடித்த படங்களின் பாடல்களை போடாமல் விஜய் நடித்த படங்களின் பாடல்களை போட்டுத்தான் ஆடிப்பாடுகிறார்களாம். அந்த அளவுக்கு கேரளாவில் விஜய் செம பிரபலமாகியிருக்கிறார்.
மேலும், அவருக்கு ஆண் ரசிகர்கள் மட்டுமின்றி பெண் ரசிகைகளும் கேரளாவில் அதிகமாக உள்ளார்களாம். அதன்காரணமாக விஜய்யின் ஒவ்வொரு பிறந்த நாளையும் விமரிசையாக கொண்டாடி வருகிறார்களாம். அந்த வகையில், வருகிற ஜூன்-22ந்தேதி விஜய்க்கு 42-வது பிறந்த நாள் வர இருப்பதால் கேரளாவில் உள்ள விஜய்யின் பெண் ரசிகைகள் இப்போதே அதை கொண்டாடத் தொடங்க யிருப்பதோடு, சிலர் ரத்ததான முகாம்களையும் நடத்தி அரசு மருத்துவமனை ரத்த வங்கிகளுக்கு கொடுத்துள்ளார்களாம். இந்த சேதி விஜய் தரப்பிற்கு வந்த போது அவர்களுக்கு வெகுவாக பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.