Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிறிய படங்களுக்கு பப்ளிசிட்டி முக்கியம்! - பட்டதாரி ஆடியோ விழாவில் சிவா பேச்சு

17 ஜூன், 2016 - 10:04 IST
எழுத்தின் அளவு:
producer-siva-speech-in--pattathari-movie-audio-launch

இயக்குனர் மு.களஞ்சியத்தின் உதவியாளர் ஏ.ஆர். சங்கரபாண்டி இயக்கியுள்ள படம் பட்டதாரி. எஸ்.எஸ்.குமரன் இசையமைத்துள்ள இப்படத்தில் அபி சரவணன்- அதிதி ஜோடி சேர்ந்துள்ளனர். இப்படத்தின் ஆடியோ விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில், டைரக்டர்கள் சசி, மு.களஞ்சியம், அம்மா கிரியேசன்ஸ் சிவா, தனஞ்செயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


விழாவில் அம்மா கிரியேசன்ஸ் சிவா பேசுகையில்,


படங்களில் சின்ன படம் பெரிய படம் என்பது கிடையாது. அதாவது சசி இயக்கிய பிச்சைக்காரன் வெளிவருவதற்கு முன்பு சின்ன படம். ஆனால் ரிலீசுக்குப்பிறகு அது பெரிய படம். அதேமாதிரிதான் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படமும் வெளிவருவதற்கு முன்பு சின்ன படம், வெளியே வந்த பிறகு பெரிய படம். ஆக, வெற்றிதான் எது சின்ன படம், பெரிய படம் என்பதை தீர்மானிக்கிறது. அதேமாதிரி இந்த பட்டதாரி படமும் இப்போது சின்ன படமாக இருக்கலாம். ஆனால் வெளியான பிறகு இதுவும் பெரிய படமாகி விடும்.


ஆனால் அதற்கு முன்பு படத்தை எப்படி ப்ரமோட் பண்ண வேண்டும் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தயாரிப்பாளர் இளங்கோவனுக்கு இது முதல் படம் என்பதால் கண்டிப்பாக நன்றாக யோசித்துதான் தயாரித்திருப்பார். அதேபோல் கதையும் நன்றாகத்தான் இருக்கும். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்த படத்தின் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன். இவர் இயக்குனர் சசியினால் பூ படத்தில் அடையாளம் காணப்பட்டவர். பின்னர் களவாணி படத்திற்கு இசையமைத்தவர், அதையடுத்து டைரக்சன், தயாரிப்பு என்று சென்று விட்டு இப்போது மீண்டும் இசையமைக்க வந்திருக்கிறார். அதோடு நல்ல பாடல்களையும் கொடுத்திருக்கிறார்.


சமீபகாலமாக தயாரிப்பாளர் சங்கம் சிறிய திரைப்படங்களுக்கு பலவிதமான உதவிகள் செய்து வருகிறது. அதோடு புதிதாக படம் தயாரிப்பவர்கள் படத்தை ப்ரமோட் பண்ண வேண்டும் என்பது போன்ற ஆலோசனைகளை தயாரிப்பாளர் சங்கத்தை அணுகி கேட்டறியலாம். இந்த ஆடியோ விழாவுக்கு இவ்வளவு மீடியாக்களை வரவைத்திருக்கிறீர்கள். ஆனால் அவர்களை இம்ப்ரஸ் பண்ண என்ன செய்திருக்கிறீர்கள்? ஒன்றுமே இல்லை. அதை செய்யாமல் விட்டது தயாரிப்பாளரின் தவறா இல்லை இயக்குனரின் தவறா என்பது தெரியவில்லை. ஆடியோ பங்சன் என்றால் பாடல்களின் விசுவல் காட்ட வேண்டும. அப்போதுதான் பாடல்களுக்கு ஒரு மரியாதை இருக்கும். எந்த படமாக இருந்தாலும் அதை சரியாக ப்ரமோட் பண்ண வேண்டும். அப்போதுதான் ஜெயிக்கும்.


இந்த ஆடியோ விழாவே பெரிதாக ரீச் ஆகியிருக்க வேண்டும். ஆனால் திரையில் போட்டோக்களை மட்டுமே போட்டு ஆடியோவை போட்டது வருத்தப்பட வேண்டிய விசயம். விசுவலும் போட்டிருக்க வேண்டும். இங்கே எனக்கு கிடைத்த அதே பீல்தான் மற்றவர்களுக்கும் கிடைத்திருக்கும். அதனால் இனிமேல் செய்யப்போகும் பப்ளிசிட்டிகளையாவது நல்லபடியாக செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ப்ரமோஷனுக்கு கொஞ்சம் கஷ்டப்படுங்க கண்டிப்பாக ஜெயிச்சிடலாம். பெரிய படங்களுக்கு நடிகர்களை வைத்து ஓப்பனிங் இருக்கும். ஆனால இந்த மாதிரி சின்ன படங்களுக்கு பப்ளிசிட்டிதான் ரீச். அதை செய்யாமல் இரண்டு நாளில் தியேட்டரில் இருந்து படத்தை எடுத்து விடுகிறார்கள் என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. அதனால் இனிமேல் நல்லடியாக விளம்பரம் செய்து பட்டதாரியை வெற்றிப்படமாக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in