மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா. இவர், படையப்பா, பாபா, சந்திரமுகி, சண்டக்கோழி, சிவகாசி, சிவாஜி என பல படங்களுக்கு கிராபிக்ஸ் டிசைனராக பணியாற்றியவர். பின்னர், கோவா படத்தை தயாரித்த செளந்தர்யா , தந்தை ரஜினி நடித்த கோச்சடையான் அனிமேஷன் படத்தை இயக்கினார். அதையடுத்து படம் இயக்கும் வேலைகளில் ஈடுபடவில்லை. முழுநேர இல்லத்தரசியாகி விட்டார். இந்நிலையில், சமீபத்தில் கபாலி படத்தின் ஆடியோவை வெளியிட்டபோது அதில் கலந்து கொண்டார்.
இந்த நிலையில், கபாலி படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கோயில் களுக்கு சென்று சிறப்பு வழிபாடு பூஜைகள் நடத்தியுள்ளார் செளந்தர்யா ரஜினி. அந்த வகையில், காளஹஸ்தி கோயிலுக்கு சென்று ராகு -கேது பூஜை நடத்திய அவர், வாயுலிங்கேஸ்வரர், குரு தட்சணாமூர்த்தி முன்பு பண்டிதர்களிடம் ஆசி பெற்றுள்ளார். இதையடுத்து, தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலுமே கபாலி படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வாயுலிங்கேஸ்வரரை வேண்டிக்கொள்ளவே காளஹஸ்தி கோயிலுக்கு தான் சென்றதாக தெரிவித்துள்ளார் செளந்தர்யா ரஜினி.