Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

தேசிய விருது பெற்ற சுராஜின் படம் தியேட்டருக்கு வருகிறது..!

16 ஜூன், 2016 - 15:39 IST
எழுத்தின் அளவு:
national-award-wining-movie-is-now-on-screen

மலையாள நகைச்சுவை நடிகர் சுராஜ் வெஞ்சாரமூட். நான்ஸ்டாப் காமெடிக்கு சொந்தக்காரரான சுராஜின் இன்னொரு முகத்தை காட்டிய படம் தான் 'பேரறியாதவர்'. இந்தப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக கடந்த 2013க்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்னும் அந்தப்படம் தியேட்டர்களில் ரிலீசாகாமலேயே பெட்டிக்குள் முடங்கி கிடக்கிறது.. பிவிஆர் க்ரூப்ஸ் நிறுவனம் இந்த படத்தை கௌரவப்படுத்தும் விதமாக கடந்த வருடம் ஜனவரி மாதம் சிறப்பு காட்சி நடத்தியதோடு சரி..



அதன்பின் தற்போது வரை ரிலீசுக்கான அறிகுறி எதுவும் இல்லை. அதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களை சொல்கிறார்கள்.. ஆனால் இந்தப்படத்தை இயக்கிய டாக்டர் பைஜூ, தனது அடுத்த படமான 'வலிய சிறகுள்ள பட்சிகள்' படத்தை எடுத்து முடித்து கடந்த வருடம் ரிலீசும் பண்ணிவிட்டார். இந்தநிலையில் இந்தப்படத்திற்கு இப்போது விமோசனம் பிறந்திருக்கிறது. வரும் ஜூலை இறுதியில், அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்தப்படத்தை பெரும்பாலான தியேட்டர்களில் வெளியிட முடிவுசெய்து அதற்கான வேலைகளும் துவக்கப்பட்டுள்ளன.. சுராஜின் மாறுபட்ட நடிப்பை காண்பதற்காகவே இந்தப்படத்தின் வெளியீட்டை மலையாள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in