மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தமிழில் ஒருபக்கம் நிக்கி கல்ராணி நடித்த படங்கள் வரிசைகட்டி நின்றாலும், தன்னை வளர்த்து, கைதூக்கிவிட்ட மலையாள திரையுலகத்தையும் அவர் ஒதுக்குவதாக இல்லை. குஞ்சாக்கோ போபன் நடிக்கும் 'ஷாஜகானும் பரீக்குட்டியும்' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க அழைத்தார்கள்.. முகம் சுளிக்காமல் சம்மதித்தார்.. கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு ஜோடியாக 'டீம் 5' படத்தில் நடிக்க அழைப்பு வந்தது.. அதையும் ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார்.. இதில் ஸ்ரீசாந்துடன் நடித்துவரும் நிக்கி, ஸ்ரீசாந்த்தை ஒரு ஹீரோவாக நினைத்து பார்த்து ஜீரணிக்கவே சிரமப்பட்டதாக சொல்கிறார்.
ஆம்.. நிக்கி கல்ராணி பள்ளியில் படிக்கும் காலத்திலேயே ஸ்ரீசாந்த் கிரிக்கெட்டில் பட்டியை கிளப்பிக்கொண்டிருந்தார்.. ஒரு ரசிகையான அவரது ஆக்ரோஷமான பந்துவீச்சை பார்த்து ரசித்த நிக்கிக்கு அவரை கேமராவுக்கு முன் நிற்கும் நடிகராக பார்ப்பதற்கு முதலில் என்னவோபோல இருந்ததாம். ஒன்றிரண்டு நாட்கள் வரை அவர் ஒரு கிரிக்கெட் வீரர் என்கிற பிரமிப்பிலேயே இருந்தாராம் நிக்கி. அதனால் அவரை நடிகராக ஜீரணிப்பது நிக்கிக்கு சிரமமாக இருந்ததாம். ஆனால் ஸ்ரீசாந்தோ, போகப்போக தேர்ந்த நடிகராக மாறி நிக்கியை ஆச்சர்யப்படுத்தி விட்டாராம்.