தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் விஜய் 1974ம் ஆண்டு ஜூன் மாதம் 22-ந்தேதி பிறந்தவர். அந்த வகையில் அவருக்கு வருகிற 22-ந்தேதி 41 வயது முடிந்த 42 வயது பிறக்கிறது. மேலும், கடந்த சில ஆண்டுகளாகவே தனது பிறந்த நாளை ரசிகர் களுடன் விமரிசையாக கொண்டாடி வருகிறார் விஜய். சென்னையில் ஒரு பெரிய அரங்கத்தை ரெடி பண்ணி அங்கு ரசிகர்கள் முன்னிலையில் விஜய்யின் பிறந்தநாள் விழாக்கள் நடந்து வருகிறது. விழாவில் வெளியூர்களில் இருந்து விஜய் ரசிகர்கள் பெருந்திரளாக சென்னை வந்து அவரை வாழ்த்தி வந்தனர்.
ஆனால், தற்போது பரதன் இயக்கும் எங்க வீட்டு பிள்ளை படத்தில் நடித்து வரும் விஜய், ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளார். ஜூன் 25-ந்தேதிக்கு பிறகுதான் அவர் அங்கிருந்து சென்னை திரும்புகிறார். இதனால் விஜய் தனது பிறந்த நாள் அன்று சென்னை வருவாரா? இல்லை ஐதராபாத்திலேயே பிறந்த நாளை கொண்டாடி விடுவாரா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. ஆனபோதும், விஜய் ரசிகர்கள் எப்போதும் போலவே வெளியூர்களில் இருந்து சென்னை வந்து விஜய் பிறந்த நாளை கொண்டாட தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்.