டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தரணி இயக்கத்தில் விஜய் நடித்த படம் கில்லி. கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவானபோதும், இந்த படத்தில் ரவுடியாக நடித்த பிரகாஷ்ராஜிடமிருந்து திரிஷாவை காப்பாற்றும் வேடத்தில் நடித்திருந்தார் விஜய். அதேபோன்ற கதையில்தான் இப்போது றெக்க படத்திலும் நடித்து வருகிறார் விஜயசேதுபதி. கதைப்படி லட்சுமிமேனனை பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றுகிறாராம் அவர். ஆக, விஜயசேதுபதியும் இந்த படத்தில் ஆக்சன் காட்சிகளில் புகுந்து விளையாடுகிறாராம்.
மேலும், லட்சுமிமேனன் இதுவரை பல ஹிட் படங்களில் நடித்திருந்தபோதும். இன்னும் அவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் இல்லை. அதனால் இந்த படத்தில் ஓரளவு கவர்ச்சிகதவுகளை திறந்து விட்டுள்ள அவர், றெக்க படம் கில்லி பாணியில் உருவாவதால், திரிஷாவின் பாணியையும் சற்று உள்வாங்கி நடித்திருக்கிறாராம். குறிப்பாக, இளவட்ட ரசிகர்களை சுண்டியிழுக்கும் சில மூவ் மெண்டுகளையும் இடுப்பை வளைத்து நொடித்து செக்ஸியாக ஆடி அசத்திருக்கிறாராம். அதனால், இந்த றெக்க படத்திற்கு பிறகு தனக்கு பெருவாரியான ரசிகர்கள் கிடைப்பார்கள் என்று எதிர்பார்க்கிறாராம் லட்சுமிமேனன்.