'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா |
கபாலி படத்தின் பாடல்கள் வெளியாகி விட்டதை தொடர்ந்து, ரஜினி ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருக்கின்றனர். நீண்ட இடைவெளிக்கு பின், தங்களுக்கு கிடைத்த இந்த இசை விருந்தை, துளித் துளியாக அனுபவித்து வருகின்றனர். சமூக வலைதளமான, டுவிட்டரில், கபாலி பாடல்கள் குறித்த, 'ஹேஷ்டாக்' உருவாக்கி, அதை தேசிய அளவில் டிரெண்ட் ஆக்கி, சாதித்து காட்டியுள்ளனர். பல இளம் நடிகர்களின் படங்கள் வெளியானபோது, அவர்களின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடுவதை, இதுவரை வேடிக்கை மட்டுமே பார்த்து வந்த ரஜினி ரசிகர்கள், தங்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பை, சரியாக பயன்படுத்தியுள்ளனர். வழக்கமாக, ரஜினி படங்களில், அவர் அறிமுகமாகும் பாடல் காட்சியில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருப்பார். ஆனால், இந்த படத்தில் அதுபோன்ற பாடல் எதுவும் இல்லை. ஆனாலும், உலகம் ஒருவனுக்கா என்ற பாடல், ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.