இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கயல் படத்தில் நடித்த ஆனந்தி, அந்த படத்தின் பர்பாமென்ஸ் ரீதியாக நல்ல பெயரெடுத்த போதும் கமர்சியல்ரீதியாக பெயரெடுக்கவில்லை. ஆனால் ஜி.வி.பிர காசுடன் நடித்த திரிஷா இல்லன்னா நயன்தாரா படம் அவரை கமர்சியல் நடிகையாக்கியது. அந்த படத்தைப்பார்த்து விட்டு சில கமர்சியல் பட டைரக்டர் கள் அவரை முற்றுகையிட்டனர். ஆனால், அதன்பிறகு கிளாமர் கதைகளில் நடிக்கமாட்டேன். அப்படி நடிக்க என்னிடம் போதுமான உடல்கட்டு இல்லை என்று நழுவினார் ஆனந்தி.
ஆனபோதும், மீண்டும் அவர் ஜி.வி.பிரகாசுடன் எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தில் நடித்தபோது அவரை கவர்ச்சியாக நடிக்க வைத்திருப்பார்கள் என்று கருதப்பட்டு வந்தபோதும், இந்த படத்தில் துளியும் நான் கவர்ச்சிகாட்டி நடிக்கவில்லை என்று கூறுகிறார் ஆனந்தி. அதோடு, இனிமேல் கதைகள் விசயத்தில் கவனமாக இருக்கப்போகிறேன். அதாவது விரசமில்லாத காதல் கதைகளாக தேடிப்பிடித்து நடிப்பேன்.
மேலும், காமெடி கலந்த காதல் கதைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்போகிறேன். அந்த வகையில், இப்போது விமல் நடிக்கும் மன்னார் வகையறா படத்தில் கமிட்டாகியிருக்கிறேன். பூபதி பாண்டியன் இயக்கும் இந்தபடத்தில் காதல் கதைதான் என்றாலும் காமெடியே பிரதானமாக உள்ளது. விமலுடன் ரோபோ சங்கர், யோகிபாபு ஆகியோர் காமெடி கலாட்டா செய்ய, பல காட்சிகளிலும் எனக்கும் அவர்களை கலாய்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்கிறார் ஆனந்தி.