'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
காக்கா முட்டை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து தற்போது இடம் பொருள் ஏவல், தர்மதுரை, மோ, குற்றமும் தண்டனையும், தீபாவளி துப்பாக்கி என பல படங்கள் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளன. அதையடுத்து கட்டப்பாவை காணோம், பறந்து செல்லவா, நிவின் பாலி படம் என அரை டஜன் படங்களை கையில் வைத்திருக்கிறார். இந்நிலையில், டாடி என்ற இந்தி படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார். இதற்காக கடந்த ஒரு மாதமாக அவர் மும்பையில் முகாமிட்டிருக்கிறார்.
மேலும், இந்த படத்திற்காக முதன்முறையாக அதிகமான சம்பளம் வாங்கி நடித்து வரும் அவர், சில காட்சிகளில் டைரக்டர் எதிர்பார்த்தையும் விட சிறப்பா க நடித்து சிங்கிள் டேக்கில் ஓகே செய்து வருகிறாராம். அதனால் அவரது கேரக்டரில் வெயிட்டான சீன்களை அதிகப்படுத்தி விட்டார்களாம். அதனால் இந்த படம் ஹிட்டானதால் இந்தி சினிமாவில் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு ஒரு பெரிய இடம் கிடைக்குமாம். மேலும், படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு பலத்த செக்யூரிட்டியும் போட்டுள்ளார்களாம். அந்த வகையில், ஐஸ்வர்யா ஸ்பாட்டில் இருந்து தங்கியிருக்கும் ஸ்டார் ஹோட்டலுக்கு சென்று வரும்போதெல்லாம் இரண்டு பாடிகார்டு கள் அவருக்கு பாதுகாப்பு கொடுத்து வருகிறார்களாம்.