ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
ஜூலை 1-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட கபாலி படம் ஜூலை 15 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. எனவே கபாலி வருவதாக சொல்லப்பட்ட ஜூலை 1 அன்று மிர்ச்சி சிவாவும், பவர்ஸ்டார் சீனிவாசனும் இணைந்து நடித்த அட்ரா மச்சான் விசிலு படம் வெளியாகிறது.
அதேநாளில் தரணிதரன் இயக்கத்தில் சத்யராஜ், சிபிராஜ் நடித்திருக்கும் ஜாக்சன் துரை படமும் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பர்மா படத்தில் வித்தியாசமான கதைக்களம் மூலம் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் தரணிதரன்.
அப்படத்தைத் தொடர்ந்து சத்யராஜ், சிபிராஜ் நடிக்க ஜாக்சன் துரை என்று படத்தை இயக்கி வந்தார். கிரீன் புரடக்ஷன்ஸ் சரவணன் தயாரித்துள்ள இப்படத்தை சரியாக திட்டமிட்டு 35 நாட்களில் முழுப் படப்பிடிப்பையும் முடித்திருக்கிறார் இயக்குநர் தரணிதரன்.
ஜாக்சன் துரை படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து தணிக்கை குழுவுக்கு அண்மையில் திரையிட்டுக்காட்டினார்கள். இப்படத்துக்கு U/A சான்றிதழ் அளித்திருக்கிறார்கள் தணிக்கைக்குழுவினர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. ஜாக்சன் துரை படம் ஜூலை 1-ம் தேதி வெளியாகும் என்ற தகவலையும் தனது ட்விட்டர் பக்கத்தில் தேனாண்டாள் பிலிம்ஸ் அறிவித்திருக்கிறது.