அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
ஆம்.. உண்மைதான்.. தமிழில் சரியான வாய்ப்புகள் அமையாத நிலையில் தான் மலையாளத்தில் நடிக்க வந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டு உள்ளார் நடிகர் விதார்த். தமிழ், மலையாளம் என இருமொழிப்படமாக உருவாக இருப்பதால், தமிழை விட்டு விலகிப்போனதாகவும் அவர் நினைக்க தேவையில்லை. 'கடோத்கஜன்' என பெயரிடப்பட்டுள்ள சுதி அன்னா என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார்.. அதுசரி திடீரென மலையாள சினிமா பக்கம் விதார்த் செல்வதற்கு காரணம் என்ன..?
இந்தப்படத்தின் திரைக்கதையை எழுதியிருப்பவர் நம்ம ஊரு இயக்குனர் ராதாமோகன் தான். அந்த நம்பிக்கை தான் இந்தப்படத்தில் விதார்த்தை ஒப்புக்கொள்ள வைத்ததாம்.. படத்தில் லாரி ட்ரைவராக நடித்துள்ள விதார்த், இந்த கேரக்டருக்காக நிறைய ஹோம் ஒர்க் செய்ய இருக்கிறாராம். வரும் செப்டம்பரில் இதன் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. விதார்த்தின் ஹிட் படமான மைனா சென்டிமென்ட்படி இந்தப்படமும் போடிமெட்டு, மூணாறு ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ளது.