ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் கத்ரீனா கைப்பும் ஒருவர். நடிகர் ரன்பீர் கபூருடன் காதலில் கசிந்துருகினார். இருவரும் திருமணம் செய்ய இருந்த வேளையில் திடீரென, இருவரது காதலில் பிளவு ஏற்பட்டு பிரிந்தனர். அவர்கள் நடித்து வரும் ‛ஜகா ஜாசூஸ்' படத்தில் கூட காட்சிக்கு எப்படி தேவையோ அந்த மாதிரி மட்டும் நடித்துவிட்டு இருவரும் அவரவர் கேரவனுக்கு உடனே சென்று விடுவார்கள். தற்போது சில படங்களில் நடித்து வருகிறார் கத்ரீனா.
இதனிடையே கத்ரீனாவுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவெடுத்திருப்பதாகவும், அவருக்கு ஏற்ற மணமகனை தற்போது அவர்கள் தீவிரமாக தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தனது திருமணம் தொடர்பாக பெற்றோரையே முடிவெடுக்க சொல்லிவிட்டார் கத்ரீனா, அதனால் அவருக்கு தீவிர மாப்பிள்ளை வேட்டை நடந்து வருவதாக பாலிவுட்டில் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அநேகமாக கத்ரீனா பற்றிய திருமண செய்தி விரைவில் வெளியாகும் என தெரிகிறது.