ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிவாஜிராவ் என்கிற ரஜினிகாந்த் 'அபூர்வ ராகங்கள்' படத்தில் பாண்டியன் என்ற சிறிய கேரக்டரில் அறிமுகமானார். அதன் பிறகு அவர் நடித்த 'மூன்று முடிச்சு', 'அவர்கள்' படத்திலும் வில்லனாக நடித்தர். அவர் முதன் முறையாக இரண்டாவது ஹீரோவாகவும், பாசிட்டிவான கேரக்டரிலும் நடித்த படம் 'கவிக்குயில்'. ஹீரோ சிவகுமார். அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஸ்ரீதேவி.
1977ம் ஆண்டு ஜூலை 29ந் தேதி வெளிவந்த இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் படாபட் ஜெயலட்சுமி. தேவராஜ் மோகன் இயக்கியிருந்தார். பஞ்சு அருணாசலம் பாடல்களையும், வசனத்தையும் எழுதியிருந்தார். எஸ்.பி.டி பிலிம்ஸ் சார்பில் எஸ்.பி.தமிழரசி தயாரித்திருந்தார். இளையராஜா இசை அமைத்திருந்தார். “குயிலே கவிக்குயிலே யார் வரவைத் தேடுகிறாய்...”, “சின்ன கண்ணன் அழைக்கிறான்...” என்ற இனிமையான பாடல்கள் இடம்பெற்றிருந்தது.