ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
வெயில் படத்தில் இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ்குமார். அடுத்தடுத்து சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து குறுகிய காலத்தில் விஜய் நடித்த தெறியோடு 50 படங்களுக்கு இசையமைத்து விட்டார். ஆனபோதும், சமீபகாலமாக அவர் நடிக்கும் படங்களில் மட்டுமே அவரது பாடல்கள் ஹிட்டாகி வருகிறது. விஜய் நடித்த தலைவா படத்திற்கு ஹிட் பாடல்களை கொடுத்த ஜி.வி.பிரகாஷ், தெறி படத்துக்கு பெரிய ஹிட் பாடல்களை கொடுக்கவில்லை. விஜய்யின் புலி படத்தின் பாடல்கள் இப்போதுவரை ஆங்காங்கே ஒலிக்கும் நிலையில், தெறி பாடல் களை எங்குமே கேட்க முடியவில்லை.
விளைவு, இப்போது ஜி.வி.பிரகாஷின் அபிமானிகள்கூட இப்போது அவரை தங்களது படங்களுக்கு இசையமைக்க சொல்ல தயங்குகிறார்கள். அவர் இப்போது அதிக படங்களில் நடிக்கும் ஹீரோவாகி விட்டார். அதனால், அவருக்கு இசையமைக்க போதுமான நேரமிருக்காது என்று சொல்லிக்கொண்டு வேறு இசையமைப்பாளர்களை நாடிச்சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தும் யுவன் ஷங்கர்ராஜா, அனிருத் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷின் இயக்குனர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்