பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
நடிகை ப்ரியங்கா சோப்ராவின் சகோதரி பரிணீதி சோப்ரா. நல்ல அழகும், திறமையும் இருந்தும் இன்னும் முன்னணி நடிகையாக வர முடியாமல் போராடி வருகிறார். தற்போது இவர் தென்னிந்திய பக்கம் தன் கவனத்தை திசை திருப்பியிருக்கிறார். தெலுங்கில், மகேஷ்பாபு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் ஹிந்தியில் அடுத்தப்படியாக மேரி பியாரி பிந்து என்ற படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் அவர் தென்னிந்திய பெண்ணாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய கலை மற்றும் கலாச்சாரத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆயுஷ்மான் குரானா எழுத்தாளராக நடிக்க, பரிணீதி, பாடகியாக நடிக்க உள்ளார். இப்படத்தை அக்ஷ்ய் ராய் இயக்க உள்ளார். விரைவில் இப்பட வேலைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.