இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மிர்ச்சி சிவா, பவர் ஸ்டார் சீனிவாசன் நடிக்கும் படம் 'அட்றா மச்சான் விசிலு'. இதில் சீனிவாசன் பெரிய நடிகராக வருகிறார். அவரது ரசிகர் மன்றத் தலைவராக சிவா வருகிறார். சீனிவாசன் நல்லவரு, வல்லவரு நாட்டைக் காப்பாற்ற அவர்தான் தலைவரு என்று நம்பி அவருக்கு விழா எடுக்கிறார், கொண்டாடுகிறார். ஆனால் பக்கத்தில் செல்லும்போதுதான் அவரின் நிஜ முகம் தெரிகிறது. அதற்கு பிறகு இருவருக்கும் நடக்கும் மோதல்தான் படம். ஹீரோ வில்லன் ஆகிறார். ரசிகர் ஹீரோவாகிறார் என்கிற வித்தியாசமான திரைக்கதை.
இவர்கள் இருவருடன் நைனா சர்வார் ஹீரோயினாக நடிக்கிறார். செண்ட்ராயன், அருண் பாலாஜி, சிங்கமுத்து, மன்சூரலிகான், டி.பி.கஜேந்தரன், மதுமிதா என காமெடி கோஷ்டிகளும் களம் இறங்குகிறது. ஜீவா நடித்த 'கச்சேரி ஆரம்பம்' படத்தை இயக்கிய திரைவண்ணன் சில வருட இடைவெளிக்கு பிறகு இந்தப் படத்தை இயக்கி உள்ளார். ரகுநந்தன் இசை அமத்துள்ளார். படம் வருகிற ஜூலை 1ந் தேதி வெளிவருகிறது.