ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தேசிய விருதுபெற்ற இயக்குனரான சித்தார்த் சிவாவின் இயக்கத்தில் நடித்துவருகிறார் நிவின்பாலி.. திருச்சூர் மெடிக்கல் காலேஜ் ஒன்றில் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தான் நடந்து முடிந்தது.. இந்தப்படத்தில் மாணவர் தலைவராக நடிக்கிறார் நிவின்பாலி. படத்தில் இவருக்கு இரண்டு ஜோடிகள்.. ஒருவர் தமிழில் 'காக்கா முட்டை' மூலம் புகழ்பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ்.. மற்றவர் கடந்தவருடம் மலையாளத்தில் 'ஜமுனா பியாரி' படம் மூலம் குஞ்சாக்கோ போபனுக்கு ஜோடியாக அறிமுகமான காயத்ரி சுரேஷ்..
தனது முதல் படத்திலேயே தனது நடிப்பு திறமையை பறைசாற்றிவிட்ட காயத்ரி சுரேஷ், நிவின்பாலி படம் மட்டுமல்லாது, வினித் சீனிவாசன் தம்பி தயன் சீனிவாசன் நடிக்கும் 'ஒரேமுகம்' படத்திலும் நடித்து வருகிறார்.. நிவின்பாலி படத்தில் நர்ஸ் கேரக்டர் என்றால், ஒரேமுகம் படத்தில் கல்லூரி மாணவி கேரக்டராம். இதில் என்ன ஸ்பெஷல் என்றால் இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு திருச்சூர் மெடிக்கல் காலேஜில் தான் நடைபெற்று வருகின்றன. முதல் படம் கூட திருச்சூரில் தான் எடுக்கப்பட்டதாம். காயத்ரியின் சொந்த ஊரும் திருச்சூர் என்பதால் ஏதோ கல்லூரி போய்வருவதுபோல காலையில் ஷூட்டிங் போய் மாலையில் வீடு திரும்பி விடுகிறாராம். கொடுத்துவைத்தவர் என்கிறார்கள் படக்குழுவினர