'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்து பத்து வருடங்களாக நடிகை ஊர்வசியின் சினிமா கேரியரை கணக்கில் எடுத்து பார்த்தால், அவர் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருவது தமிழ்ப்படங்கள் மட்டுமே.. அதற்கேற்ற மாதிரி ஊர்வசிக்கென முக்கியத்துவம் உள்ள கேரக்டர்கள் அவரை தேடி வருவதால், அவரது தாய்மொழியான மலையாளத்தில் அதிக கவனம் செலுத்தாமல் இருந்துவந்தார். இந்த பத்து வருடங்களில் மலையாளத்தில் வெகு சொற்பமான படங்களில் மட்டுமே நடித்துள்ளார் ஊர்வசி. ஆனால் அந்தக்குறையை தீர்க்கும் விதமாக தற்போது மலையாளத்தில் 'ஹவிஸ்' என்கிற படத்தில் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்துள்ளது..
ஊர்வசி தனது லைப் டைமில் இதுநாள்வரை ஏற்று நடிக்காத கேரக்டர் இது என்பதால் கதைகேட்டவுடனேயே ஒப்புக்கொண்டாராம். 'ஹவிஸ்' என்றால் சிவனுக்கு கொடுக்கும் அவிர்பாகம் என்று பொருளாம். அதற்கேற்ற மாதிரி கதை 1950 முதல் 1980 வரை உள்ள காலகட்டத்தின் பின்னணியில் நடக்கும் விதமாக பின்னப்பட்டுள்ளதாம். ஊர்வசியுடன் சேர்ந்து தலைவாசல் விஜய்யும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். பிராமண சமூகத்தின் இன்னும் சொல்லப்படாத சில மோசமான, அதிர்ச்சியூட்டும் பக்கங்களை இந்தப்படத்தில் சொல்ல இருக்கிறர்களாம். உண்மை சம்பவத்தை படமாக்குவதால் இதில் நடிக்கும் ஊர்வசியின் கேரக்டர் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்கிறார் படத்தின் இயக்குனரான சாரதாமணி.