'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சிறு சிறு கேரக்டர்களில் நடித்து வந்த அப்புக்குட்டி 'அழகர்சாமியின் குதிரை' படத்தில் ஹீரோவாக நடித்ததுடன். அந்த படத்திற்கு அவர் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் வாங்கினார். அதன் பிறகு 'மன்னாரு' என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்தப் படம் தோல்வி அடையவே அதன் பிறகு அவருக்கு ஹீரோ வாய்ப்புகள் அமையவில்லை. மீண்டும் சிறு சிறு கேரக்டர்களில் நடிக்க ஆரம்பித்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார்.
'காகித கப்பல்' என்ற படத்தில் அஜீத் அறிவுரைப்படி சிவபாலன் என்ற தனது சொந்த பெயரில் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தில்லிஜா என்ற புதுமுகம் நடிக்கிறார். பவர் ஸ்டார் சீனிவாசன், பரோட்டா முருகேசன், எலி ராஜன் உள்பட பலர் நடிக்கிறார்கள். பிரசன்னா இசை அமைக்கிறார், வெங்கட் ஒளிப்பதிவு செய்கிறார். எவர்கிரீன் மூவி இண்டர்நேஷனல் சார்பில் வி.ஏ.துரை தயாரிக்கிறார். எஸ்.சிவராமன் இயக்குகிறார்.
“குப்பை பொறுக்கிற வேலையை ரசித்து ஜெய்கிற தொழிலாளி அவன். அதை மக்கள் சேவையாகவும் நினைக்கிறான். இவனது நல்ல குணத்தால் கவரப்படும் ஒரு படித்த பெண் இவனை காதலிக்கிறாள். கல்யாணமும் செய்து கொள்கிறார்கள். திருமணத்துக்கு பிறகு அவளுக்கு வந்த ஒரு சின்ன ஆசையால் ஜாலி கப்பலாக இருந்த அவனின் வாழ்க்கை காகித கப்பலாக எப்படி மாறியது என்பதுதான் கதை” என்கிறார் இயக்குனர் சிவராமன்.