'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சத்யராஜ் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், அவரது கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது 'பாகுபலி' படம். இந்தப் படத்தில் சத்யராஜ் ஏற்று நடித்த கட்டப்பா கேரக்டர் அனைவராலும் பாராட்டப்பட்டது மட்டுமின்றி, பாகுபலியில் பேசப்பட்ட கேரக்டராகவும் அமைந்தது. இப்போது உருவாகி வரம் பாகுபலி-2 படத்திலும் கட்டப்பா கேரக்டரில்தான் நடித்து வருகிறார் சத்யராஜ்.
இந்நிலையில் சத்யராஜின் மகன் சிபி ராஜ் நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு 'கட்டப்பாவை காணோம்' என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இந்த படத்தை அறிமுக இயக்குனர் மணி சையோன் என்பவர் இயக்குகிறார். இந்த தலைப்பு வைக்க என்ன காரணம்? என்று சிபியிடம் கேட்டால், “ மணி சையோன் உருவாக்கியிருக்கும் கதைக்கும், அதில் ஹீரோவாக நடிக்கும் என் கேரக்டருக்கும் இந்த தலைப்பு மிக பொருத்தமாக இருக்கும் என்பதால்தான்” என்கிறார் சிபிராஜ்!
அதுமட்டுமல்ல,''பாகுபலி' பட இன்ஸ்பிரேஷனில் உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் தலைப்பு எந்த வகையிலும் 'பாகுபலி' படத்தையோ அல்லது என் அப்பா நடித்த கட்டப்பா கேரக்டரையோ கொச்சைப்படுத்தாது. அதன் நற்பெயரை கெடுக்கும் விதமாகவும் இருக்காது” என்றும் தெரிவித்திருக்கிறார் சிபி ராஜ்!
இது ஒரு பக்கம் இருக்க, சத்யராஜ், சிபி ராஜ் நடிப்பில் விரைவில் ரிலீசாகவிருக்கிற 'ஜாக்சன் துரை' படத்தின் தெலுங்கு டப்பிங் வெர்ஷனுக்கு 'கட்டப்பா ராஜு' என்று டைட்டில் வைத்திருக்கின்றனர்!
கட்டப்பாவை விட மாட்டாங்க போலிருக்கே...!