ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்ப் படங்களுக்கு தமிழில் தலைப்பு வைக்க வேண்டும் என்பதற்காகவே தமிழக அரசு தமிழில் தலைப்பு வைக்கும் படங்களுக்கு வரிவிலக்கு என்ற விஷயத்தை செயல்படுத்தியது. அதனால்தான் கடந்த சில வருடங்களாக தமிழ்ப்படங்கள் தமிழ்ப்பெயரில் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், சித்தார்த் போன்ற சிலர் தமிழில் தலைப்பு வைக்க வேண்டும் என்பதை பொருட்படுத்தாமல் ஜில் ஜங் ஜக் என தலைப்பு வைத்து படம்எடுத்தனர். வரிவிலக்கு வேண்டாம் என்ற முடிவோடு இப்படி பிறமொழி வார்த்தைகளில் பெயர் வைத்தார். இந்த வரிசையில் சித்தார்த் நடிக்கும் புதிய படத்துக்கு சைத்தான் கி பச்சா என பக்காவாக ஹிந்தி மொழியிலேயே தலைப்பு வைத்துள்ளார்கள்.
'கப்பல்' படத்தை இயக்கிய கார்த்திக் ஜி.க்ரிஷ் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சித்தார்த்தும், சந்தோஷ் நாராயணனும் இணையும் மூன்றாவது படம் இது. இப்படத்திற்கான கதாநாயகி வேட்டை நடைபெற்று வருகிறது. சைத்தான் கி பச்சா என்று தலைப்பு வைத்தால் நிச்சயமாக தமிழ் ஆர்வலர்களும், தமிழ் அமைப்புகளும் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும். அந்த எதிர்ப்பையே சைத்தான் கி பச்சா படத்தின் பப்ளிசிட்டியாக மாற்ற திட்டமிட்டிருக்கிறார்கள் போலிருக்கிறது.