'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
பிரபுசாலமன் தயாரிப்பில் அன்பழகன் இயக்கிய படம் சாட்டை. சமுத்திரகனி லீடு ரோலில் நடித்திருந்த அந்த படத்தில் இளம் நாயகனாக யுவன் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் வெற்றி பெற்றபோதும் அதன்பிறகு யுவனுக்கு பெரிய அளவில் படங்கள் இல்லை. அவர் நடித்த காதலைத்தவிர வேறொன்றும் இல்லை, கமரக்கட்டு போன்ற படங்கள் தோல்வியடைந்தன. அதனால் மார்க்கெட்டில் பின்தங்கியிருக்கும் அவர், தற்போது காதல் கதைகளில் இருந்து விடுபட்டு பேய் படங்களில் நடித்தாவது மார்க்கெட்டை பிடிப்போம் என்ற நிலைக்கு வந்திருக்கிறார்.
அந்த வகையில், தற்போது, ஓடுங்க என்னவோ வருது -என்றொரு ஹாரர் படத்தில் நாயகனாக நடித்துக்கொண்டிருக்கிறார் யுவன். அதிரடியான பேய் கதையில் உருவாகும் இந்த படத்துக்காக தனது பழைய மேனரிஸத்தை மாற்றி, இயல்பான நடிகராக நடித்துக்கொண்டிருக்கிறார் யுவன்.
இப்படம் குறித்து அவர் கூறுகையில், இதற்கு முன்பு எத்தனையோ ஹாரர் படங்கள் வந்திருந்தாலும், இந்த படம் மிரட்டலான படமாக இருக்கும். கதை கேட்கும்போதே பயந்துநடுங்கி விட்டேன். அந்த வகையில், சாட்டை படத்துக்குப்பிறகு இந்த படம் எனக்கு மெகா ஹிட்டாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார்.