ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் சந்தானத்தின் தந்தை நீலமேகம், உடல்நலக்குறைவால் காலமானார். சின்னத்திரையில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் அசத்தி வந்த சந்தானம் பின்னர் வெள்ளித்திரையில் நுழைந்து குறுகிய காலத்திலேயே அசுர வளர்ச்சி பெற்றார். சந்தானம் இல்லாத படங்களே இல்லை என்ற அளவுக்கு முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்தார். தற்போது ஹீரோவாகவும் அசத்தி வருகிறார்.
சந்தானத்தின் தந்தை நீலமேகம். கல்லீரல் பிரச்னை காரணமாக கடந்த ஒருவார காலமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று(ஜூன் 10-ம் தேதி) சுமார் 4மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.
நீலமேகத்தின் இறுதிச்சடங்கு, சென்னை, பல்லாவரத்தை அடுத்துள்ள பொழிச்சநல்லூரில் நாளை(ஜூன் 11-ம் தேதி) மாலை நடைபெறுகிறது.