தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணியில் இருக்கும் நடிகை ஹன்சிகா மோத்வானி. பல சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். இவரது அம்மா டாக்டர் மோனா. மும்பையில் பிரபல அழகியில் மருத்துவர் (பியூட்டீஷியன் டாக்டர்). ஹன்சிகாவின் கால்ஷீட் விவகாரம், சம்பளம், தினசரி நிகழ்ச்சி நிரல் ஆகியவற்றை ஒரு மானேஜராக இருந்து கவனித்து வந்தார். தற்போது ஹன்சிகாவின் மானேஜராக ஜெகதீஷ் என்பவரை நியமித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் மோனா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஹன்சிகா தெலுங்கு, தமிழில் வளர்ந்து வரும் நடிகை. அவருக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள். இதுவரை நான்தான் அவருக்கு எல்லாமுமாக இருந்து கவனித்து வந்தேன். ஆனால் என்னால் அதை தொடர முடியவில்லை. நான் மருத்துவர் என்பதால் எனது மருத்துவ சேவைக்கு நிறைய நேரம் தேவைப்படுகிறது. ஹன்சிகா நடத்தும் சமூக பணிகளுக்கும் நான் நேரம் ஒதுக்க வேண்டும். எனவே இனி ஹன்சிகாவின் கால்ஷீட் உள்ளிட்ட அனைத்தையும் கவனித்துக் கொள்ள ஜெகதீஷ் என்பரை மானேஜராக நியமித்துள்ளேன். இனி தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் அவரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.