ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விந்தியா, குண்டு கல்யாண், ராமராஜன், ஆனந்த்ராஜ், சிஆர் சரஸ்வதி, சிங்கமுத்து, ஆர்த்தி உள்ளிட்ட பல நடிகர்கள் ஏற்கனவே அதிமுகவில் ஐயக்கியமாகியுள்ள நிலையில் இப்போது புதிதாக நடிகர் போண்டா மணியும் தன்னை அதிமுக.,வில் இணைத்து கொண்டார்.
இலங்கையை பூர்வீகமாக கொண்ட போண்டா மணி தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ளார். குறிப்பாக வடிவேலுவுடன் இவர் ஆறு, இங்கிலீஷ்காரன் போன்ற படங்களில் நடித்த காமெடி காட்சிகள் பிரபலமானவை.
சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்து வந்த நேரத்தில் ஜெயா டிவியில் நடிகர் சிங்கமுத்துவுடன் இணைந்து ‛நல்லா சொல்றாங்கய்யா டீட்டெய்லு' என்ற நிகழ்ச்சியில் நடித்ததுடன் அப்போதே அதிமுக., புகழ் பாடி வந்தார். இந்நிலையில், தற்போது தன்னை அதிகாரப்பூர்வமாக முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுக.,வில் இணைத்து கொண்டுள்ளார். அவருக்கு முதல்வர் ஜெயலலிதா அதிமுக.,வின் உறுப்பினர் அட்டையை வழங்கினார்.
இனி வரும்காலங்களில் அதிமுக.,வின் அநேக பிரச்சார மேடைகள், பொதுக்கூட்டங்களில் போண்டா மணியையும் காணலாம்.