‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
இதுவரை கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்று அடம் பிடித்து வந்த காஜல் அகர்வாலுக்கு இப்போது படத்துக்குப்படம் அப்படி நடித்து போரடித்து விட்டதாம். அதனால் தன்னிடம் கதை சொல்ல வரும் டைரக்டர்களிடம், கதையோடு பயணிக்கும் அழுத்தமான வேடம் கொடுங்கள் என்கிறாராம். அதோடு, தனது சமகாலத்து நடிகைகளான அனுஷ்கா, நயன்தாரா, திரிஷா போன்ற நடிகைகள் சமீபகாலமாக கதையின் நாயகிகளாக உருவெடுத்திருப்பதால், தன்னாலும் மாறு பட்ட வேடங்களில் நடிக்க முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக, தற்போது கன்னட நடிகர் சுதீப் வில்லனாக நடிக்கும் ருத்ரக்ஷா என்ற படத்தில் அவருக்கு ஜோடியாகியிருக்கிறார்.
தெலுங்கு, கன்னடத்தில் கிருஷ்ணவம்சி இயக்கி வரும் இந்த படத்தில் சந்தீப், ரெஜினா ஜோடியாக நடிக்க, சுதீப் அதிரடி வில்லனாக நடிக்கிறார். இதில் சுதீப்புக்கு ஜோடி நடிகை தேடப்பட்டு வந்த சேதியறிந்த காஜல்அகர்வால், தானே முன்வந்து நடிக்க சம்மதம் சொன்னாராம். அதோடு அவருக்கு படம் முழுக்க வரும் வேடம் இல்லையாம். ஒரு பத்து சீன்கள்தான் உள்ளதாம். ஆனபோதும், காஜல்அகர்வாலை, புதிய கோணத்தில் வெளிப்படுத்தும் வேடமாம். கூடவே வில்லன் சுதீப்புடன் ஒரு கவர்ச்சி ஆட்டமும் போட்டுள்ளாராம் காஜல்.