அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
முன்னாள் ஆந்திர முதல்வரும் மறைந்த மூத்த நடிகருமான என்.டி.ஆரின் குடும்ப வாரிசான ஜூனியர் என்.டி.ஆர் தற்போது டோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார். என்.டி.ஆர் போல் உருவ ஒற்றுமையோ நடிப்போ ஜூனியர் என்.டி.ஆரிடம் இல்லை என என்.டி.ஆரின் மனைவி லக்ஷ்மி பார்வதி கூறியிருப்பது டோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கெடுத்த என்.டி.ஆரின் மனைவி லக்ஷ்மி பார்வதியிடம் என்.டி.ஆருக்கும் ஜூனியர் என்.டி.ஆருக்கும் உள்ள ஒற்றுமை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த லக்ஷ்மி என்.டி.ஆருக்கும் ஜூனியர் என்.டி.ஆருக்கும் எவ்வித உருவ ஒற்றுமையும் இல்லை என கூறினார். மேலும் என்.டி.ஆரின் நடிப்பிற்கும் ஜூனியர் என்.டி.ஆரின் நடிப்பிற்கும் எவ்வித ஒற்றுமையும் இல்லை எனவும் லக்ஷ்மி கூறியுள்ளார். என்.டி.ஆரின் திரை உலக வாரிசு என கருத்தப்படும் ஜூனியர் என்.டி.ஆர் குறித்த லக்ஷ்மி பார்வதியின் இவ்வித கருத்து தற்போது வைரலாகியுள்ளது.