பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கோலிவுட்டில் கடந்த இரண்டு நாட்களாக ரஜினிகாந்திற்கு உடல்நிலை சரியில்லை என்ற வதந்தி பரவி வருகிறது. 'கபாலி' படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்காமல் ஆடியோ சி.டி.க்கள் நேரடியாக கடைகளுக்கு அனுப்பப்படும் என்ற தகவல்தான் அதற்குக் காரணமாக அமைந்தது.
நாம் விசாரித்தவரையில் ரஜினிகாந்த் தற்போது அமெரிக்காவில் ஓய்வில் இருக்கிறார் என்றுதான் தெரிகிறது. அதோடு அவர் ஜுலை கடைசி வாரத்தில்தான் இந்தியா திரும்புவார் என்றும் சொல்கிறார்கள். கடும் கோடை வெயிலில் டெல்லியில் '2.0' படப்பிடிப்பில் கலந்து கொண்டதும், தொடர்ந்து 'கபாலி' படத்தில் ஓய்வில்லாமல் கலந்து கொண்டதும் அவருக்கு கொஞ்சம் சிரமத்தைக் கொடுத்திருக்கிறது.
டாக்டர்கள் பரிசோதித்த பின்னர் ரஜினிகாந்துக்கு நல்ல ஓய்வு தேவை என்று அறிவுறுத்தியுள்ளனர். அதைத் தொடர்ந்துதான் அவர் குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்று அங்கு ஓய்வெடுத்து வருகிறார். உடனடியாக இந்தியா திரும்பாமல் '2.0' படத்திற்கான மேக்கப் டெஸ்ட்டுகளும் நடப்பதால் அவருடைய இந்தியப் பயணம் தள்ளிப் போடப்பட்டதாகவும் சொல்கிறார்கள். ஆனால், ரஜினிகாந்திற்கான '2.0' மேக்கப் டெஸ்ட்டுகள் கூட முடிவடைந்துவிட்டதாகவும், தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டால் மேலும் ஏதும் சிரமம் ஏற்படாமல் இருக்க அவர் முழு ஓய்வு எடுத்த பின்பே படத்தைத் தொடரலாம் என படப்பிடிப்புக் குழுவினர் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
அதனால், '2.0' படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக இன்னும் கொஞ்ச காலம் ஆகலாம் என்கிறார்கள். 'கபாலி' படம் வெளியாகும் போது கூட ரஜினிகாந்த் அமெரிக்காவில்தான் இருப்பார் என்று சொல்கிறார்கள்.
ரஜினிகாந்த் குடும்பத்தாரிடமிருந்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளிவந்தால் மட்டுமே இந்த விவகாரத்தில் உண்மை என்ன என்பது தெரியும்.