'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட்டின் முன்னணியும், திறமையான நடிகை வித்யாபாலன். இவர் தயாரிப்பாளர் சித்தார் ராய் கபூரை திருமணம் செய்துள்ளார். சித்தார்த், டிஸ்னியின் இந்திய தலைமை அதிகாரியாக இருக்கிறார். தற்போது வித்யாபாலன் டீன் (TE3N) என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் புரொமோஷன் வேலைகள் தற்போது மும்முரமாய் நடந்து வருகிறது. அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தன் கணவரின் பட தயாரிப்பில் நான் ஒரு போதும் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து வித்யாபாலன் மேலும் கூறியிருப்பதாவது.. முடிந்தவரை என் கணவரின் தயாரிப்பு நிறுவனத்தில் படம் பண்ணக்கூடாது என்று இருக்கிறேன். நாங்கள் இருவரும் அவரவரின் பாதைகளில் தனியாக பயணிக்க விரும்புகிறோம். இந்த முடிவால் சில நல்ல படங்களின் வாய்ப்பை நான் இழந்துள்ளேன், இருந்தாலும் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை என்று கூறியுள்ளார்.