இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
'எங்கேயும் எப்போதும்' படத்தின் மூலம் அறிமுகமானவர் இசை அமைப்பாளர் சத்யா. 'தீயா வேலை செய்யணும் குமாரு', 'உன்னோடு கா', 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' ஆகிய காமெடி படங்களுக்கு இசை அமைத்து காமெடி இசை அமைப்பாளராகிவிட்டார். ஆனால் அவர் இதனை மறுக்கிறார்.
“பொன்மாலை பொழுது' காதல் படம், 'காஞ்சனா' பேய்படம், 'இவன் வேற மாதிரி' ஆக்ஷன் படம் இப்படி விதவிதமாகத்தான் இசை அமைக்கிறேன். அடுத்து 'ஜெட்லி' என்ற காமெடி படத்துக்கு இசை அமைக்கிறேன். என்னுடைய அப்பா இசை துறையில் சாதிக்க வேண்டும் என்று ஆசைப் பட்டார் அவரது கனவை நிறைவேற்ற பாடு பட்டேன். சிறு வயதிலே கர்நாடக சங்கீதம் பயின்றேன். கங்கை அமரன், ஏ.ஆர்.ரகுமான் உட்பட பலரிடம் கீபோர்டு பிளையராக பணியாற்றி இருக்கிறேன். பல விளம்பரப் படங்களுக்கு இசையமைத்தேன். சில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கிய ஏன் இப்படி மயக்கினாய் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானேன். ஆனால் ஜெய், அஞ்சலி நடித்த எங்கேயும் எப்போதும் என்னை பிரபலமாக்கியது அதை தொடர்ந்து பல படங்களில் வேளை செய்தேன் சமீபத்தில் வெளியான உன்னோடு கா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் பட பாடல்களின் வெற்றி எனக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
குறிப்பாக உன்னோடு கா படத்தில் என் மகள் வைமித்ரா ஒரு பாடலை பாடியுள்ளார். தற்போது ஜெட்லி, அசுரகுலம், இயக்குனர் பார்த்திபனின் அடுத்த படம் உட்பட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறேன் இதுவரை என் இசையில் நடிகைகள் யாரும் பாடியதில்லை. பாடலுக்கு தேவைப்படும் பட்சத்தில் பாட வைப்பேன் என்றார்.