Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமலாபாலின் ஒரு நாள் தோழி

09 ஜூன், 2016 - 10:38 IST
எழுத்தின் அளவு:
Amala-pauls-oneday-friend

தனுஷ் தயாரிக்கும் படம் 'அம்மா கணக்கு' படத்தில் அமலா பால், ரேவதி நடிக்கிறார்கள். 24 வயது பெண் 18 வயது சிறுமிக்கு அம்மாவாக நடிக்கும் வித்தியாசமான கதை. இந்தி, தமிழ் மொழிகளில் தயாராகி வருகிறது. இதில் அமலாபால் வானகரத்தில் உள்ள பிரமாண்ட மீன் சந்தையில் மீன் விற்கும் பெண்ணாக நடிக்கிறார்.


அவர் மீன் விற்கும் பெண்ணாக நடிக்கும் காட்சி வானகரத்தில் உள்ள மீன் சந்தையில் ஒரு நாள் நடந்தது. அப்போது இயக்குனர் அஸ்வினி அய்யர் திவாரிக்கு இந்த காட்சிகளில் அமலாபாலுக்கு ஒரு தோழி இருந்தால் நன்றாக இருக்குமே என்று கருதியிருக்கிறார். உடனே சுற்றும் முற்றும் பார்த்தவர் அங்கு எளிய அழகு, சாந்தமான முகத்துடன் மீனவ பெண்ணின் அச்ச அசல் சாயலில் நின்று கொண்டிருந்த மகேஸ்வரி என்ற பெண்ணை அழைத்து சில மணி நேரம் பயிற்சி கொடுத்து அமலாபாலின் தோழியாக நடிக்க வைத்து விட்டார்.


மகேஸ்வரி ஒரு சில காட்சியில் நடித்திருந்தாலும் அது படத்தில் பளிச்சென்று தெரியுமாம். இதனால் மகேஸ்வரிக்கு மேலும் வாய்ப்புகள் குவியலாம் என்று வானகர மீன் வியாபாரிகள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in