'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாப் கட்டிங், மெலிந்த தேகம் என, சுத்தமாக ஆளே மாறிப் போயிருக்கிறார் தன்ஷிகா. கபாலியில் ரஜினிக்கு மகளாக நடித்த சந்தோஷத்தில் இருந்த அவருக்கு, காத்தாடி படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்துஉள்ளது. அதுவும், அதிரடி போலீஸ் அதிகாரியாக, அந்த படத்தில் நடித்துள்ளார். இதுவரை நடித்திராத கேரக்டர் என்பதால், ரொம்பவே ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறாராம். 'நடிப்பின் மீதுள்ள ஆசையால், படிப்பை பாதியில் கைவிட்டவள் நான். சரியான வாய்ப்புகள் கிடைக்காததால், நம் எதிர்காலம் வீணாகி விடுமோ என பயந்தேன். ஆனால், இப்போது பெரிய வாய்ப்புகள் என்னை தேடி வருகின்றன. நான் எடுத்த முடிவு சரியானது தான் என, இப்போது ஆறுதல் அடைந்திருக்கிறேன்' என்கிறார் தன்ஷிகா.