மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஒரு வருடத்திற்கு முன்புதான் மலையாளத்தில் வெளிவந்த 'மிலி' படத்தில் அமலா பால் பள்ளி மாணவியாக நடித்திருந்தார். ஆனால், இந்த வருடம் 15 வயது பெண் ஒருவருக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். தனுஷ் தயாரிப்பில் அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவாகியுள்ள 'அம்மா கணக்கு' படத்தில்தான் அமலா பால் அம்மாவாக நடித்திருக்கிறார். திருமணம் ஆன நடிகைகளை அடுத்து அம்மா, அக்கா, அண்ணி வேடங்களில் தான் நடிக்க அழைப்பார்கள் அப்படியே உங்களுக்கும் அமைந்து விட்டதா என்று கேட்டால் அதிர்ச்சியடைகிறார்.
“அம்மா கணக்கு' படம் ஹிந்தியில் வெளிவந்துள்ள 'நில் பட்டே சன்னாட்டா' படத்தின் ரீமேக். மும்பைக்குச் சென்ற போது இந்தப் படத்தின் டிரைலரைப் பார்த்த தனுஷ் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய முடிவெடுத்தார். அங்கிருந்தே எனக்கு தொலைபேசியில் எனக்கு போன் செய்து இப்படி ஒரு படம் தயாரிக்கலாம் அதில் நீங்கள் நடிக்க வேண்டும் என்றார். சரி, என்ன கதாபாத்திரம் என்று கேட்டேன், ஒரு வேலைக்காரப் பெண், அதோடு 15 வயது சிறுமிக்கு அம்மா என்றார். உடனே என்னைப் பார்த்தால் அப்படியா தெரிகிறது என்று கேட்டேன். இருந்தாலும் அவர் படத்தின் கதையையும், கதாபாத்திரத்தையும் பற்றி சொன்னதுமே இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன்.
படத்தில் எனக்கு வேறு ஒருவர் டப்பிங் கொடுத்ததால் எனக்கு தேசிய விருது கிடைக்க வாய்ப்பில்லை என்று சொல்கிறார்கள். விருது கிடைத்தாலும் சரி, கிடைக்கவில்லை என்றாலும் சரி, மக்களிடம் சென்று சேர்வதே பெரிய விருதுதான்,” என இப்போதே அதற்குத் தயாராகிவிட்டார் அமலா பால்.
படத்தின் டிரைலரைப் பார்க்கும் போது தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த 'காக்கா முட்டை, விசாரணை' போன்ற படங்களின் வரிசையில் இந்த 'அம்மா கணக்கு' படமும் தரமான படங்களின் வரிசையில் இடம் பெறும் எனத் தெரிகிறது.