'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வித்யாபாலன் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படங்களில் கஹானி படமும் ஒன்று. தற்போது கஹானி இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதிலும் வித்யாபாலனே முக்கிய ரோலில் நடிக்கிறார். இப்படம் கஹானியின் தொடர்ச்சி அல்ல என்று கூறியிருக்கிறார் வித்யாபாலன்.
இதுகுறித்து வித்யாபாலன் கூறியிருப்பதாவது... கஹானி படத்தின் தொடர்ச்சியாக கஹானி-2 இருக்காது. இப்படத்தின் கதை, கேரக்டர் எல்லாம் முற்றிலும் மாறுபட்டது. கஹானி போன்ற படங்களின் தொடர்ச்சியை மக்கள் நிச்சயம் ரசிப்பார்கள். கஹானி படம் வெளிவந்தபோது முதலில் படம் பிக்கப் ஆக கொஞ்சம் தாமதமானது. பின்னர் அந்தப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததுடன் பாக்ஸ் ஆபிசிலும் இணைந்தது. ரசிகர்களும் அப்படத்தை பற்றி நிறைய பேசினார்கள். ஆனால் கஹானி-2 படத்திற்கு அந்தமாதிரி இருக்காது. கஹானி படம் ரசிகர்கள் நன்கு தெரிந்துள்ளதால் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.