விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
தமிழில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்த ஜோதிகா தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து முன்னணி நடிகையாகவே திகழ்ந்தார். 2006ல் ரவிதேஜாவிற்கு ஜோடியாக ஜோதிகா இணைந்து நடித்த ஷாக் எனும் தெலுங்கு திரைப்படத்தை 10 வருடங்கள் கழித்து தற்போது தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றதாம். டோலிவுட்டின் சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா தயாரிப்பில் இயக்குனர் ஹரீஷ் சங்கர் இயக்கிய இப்படம் விமர்சக ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும் வசூலில் சுமார் ரகமே. ஷாக் திரைப்படம் ஹிந்தியில் கிக் ரிடன்ஸ் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது. தற்போது தமிழில் இப்படம் டப் செய்யப்பட்டு வெளியிடப்படவுள்ளதாம். கடந்த ஆண்டு ஜோதிகாவின் 36 வயதினிலே திரைப்படம் வெளிவந்து வெற்றி பெற்றது. மேலும் ஜோதிகா மீண்டும் திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகின்றார். இதனால் ஷாக் படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றதாம்.